Friday, 24 May 2019

முடக்கு  ராசி ஒரு ஜோதிட பார்வை.

முடக்கு ராசி என்பது சூரியன் இருக்கும் ராசியில் இருந்து தனுசு வரை எண்ணி  பிறகு தனுசுவில் இருந்து அதே எண்ணிக்கையை எண்ணிவரும் ராசியாகும்.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது என்னவென்றால் ஏன் தனுசு வரை சூரியன் இருக்கும் ராசியில் இருந்து என்ன வேண்டும் என்பதே கேள்வியாகும்.

இதற்கு நாம் விடை காணும் முன்பு இந்தப் பிரபஞ்சத்தின் உச்சி மற்றும் அடியினை சற்று சிந்திக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கமாக ஸ்பைகா என்று கூறக்கூடிய கன்னி ராசியில் உள்ள நட்சத்திரத்தினை கூறுகின்றனர் எனவே தனுசு ராசி என்பது பிரபஞ்சத்தின் மத்தியபாகமாய் அமைகிறது. ஆகவேதான் தனுசு ராசி வரை சூரியன் இருக்கும் ராசியில் இருந்து எண்ணி முடக்கு ராசி பலன் பார்க்கப்படுகிறது.

ராசி மண்டலத்தை பிரபஞ்சமாக உருவகப் படுத்திக் கொண்டால் மிதுனம்  மற்றும் தனுசு ராசிகள் பிரபஞ்சத்தின் மத்திய பாகம் ஆக அமைகிறது மேலும் விருச்சிகமும் மகரமும் ஒன்றுக்கொன்று நேராகவும் துலாமும் கும்பமும் ஒன்றுக்கொன்று நேராகவும் கண்ணியும் மீனமும் ஒன்றுக்கொன்று நேராகவும் சிம்மமும் நேசமும் ஒன்றுக்கொன்று நேராகவும் கடகமும் ரிஷபமும் ஒன்றுக்கொன்று நேராகவும் அமைகிறது. (படம் பார்க்க)

முடக்கு ராசிக்கும் பாதகாதிபதி ராசிக்கும் நெருங்கிய தொடர்புஉள்ளது மேலும் முடக்கு ராசிக்கும் ஏகார்களத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

சரி அடுத்து தனுசு ராசியில் இருக்கும் மூலம் நட்சத்திரம் வரை ஏன் என்ன வேண்டும் என்பது இங்கு ஒரு கேள்வியாக வருகிறது இதற்கு நாம் விடை காண்பதற்கு முன் ஸ்பைகா என்று கூறக்கூடிய சித்திரை நட்சத்திரத்தின் தொடர்பினை அறிந்து கொள்ள வேண்டும். சித்திரை நட்சத்திரம் என்பது ஆரம்பமாக கருதினால் மூல நட்சத்திரம் பாதாளம் ஆகவும் ரேவதி நட்சத்திரம் அந்தி ஆகவும் புனர்பூசம் உச்சியாகும் உள்ளது.

சூரியனே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாய் அமைகிறது சூரியனில்இருந்து வரும் ஒளி வெப்பம் சீதோஷ்ண நிலையை தீர்மானித்து உயிர்களுக்கு ஜீவன் மற்றும் ஆற்றலை தருகிறது. தாவரம் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு சூரிய ஒளியே இன்றியமையாததாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையைப் பொறுத்தே அவருடைய சுயமரியாதை நிர்ணயம் ஆகிறது.

மெய்ஞானத்தில் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை உயிர் பிரயாணம் செய்வதை யோகம் என்று அழைக்கின்றனர். தனுசு ராசியில் இருக்கும் மூலம் நட்சத்திரம் ஆனதே மூலாதாரமாகவும் மிதுன ராசியில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம் ஆனது சகஸ்ராரம் ஆகவும் அமைகிறது.  திருவாதிரை நட்சத்திரத்தில் தான் சகஸ்ராரம் நாதனாகிய ருத்ரன் அமைவது குறிப்பிடத்தக்கது. மூலம் நட்சத்திரத்தின் சக்தியானது கீழ்நோக்கியும் திருவாதிரை நட்சத்திரத்தின் சக்தியானது மேல்நோக்கியும் இருக்கிறது.  ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக திருவாதிரை நட்சத்திரத்தின் ருத்ரனின் தலை  உருவகப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து மூலம் நட்சத்திரம் என்பது ஒரு மனிதனின் அஸ்திவாரமாய் அமைவது புரிந்துகொள்ள முடிகிறது. எனவே கீழ்நோக்கி இயங்கக்கூடிய மூல நட்சத்திரம் வரை சூரியன் இருக்கும் இடத்திலிருந்து எண்ணி காண்பது முடக்கு ராசியாக  அமைகிறது.

மூலம் என்பது முடிவாக கொண்டோமானால் பூராடம் என்பது தொடக்கமாக அமைகிறது சூரியன் இருக்கும் இடத்திலிருந்து மூலம் வரை எண்ணி பிறகு பூராடத்திலிருந்து அதே எண்ணிக்கையை எண்ணி காண்பதே முடக்கு ராசி ஆகும்.

ஒருவரின் தனித்துவம், நம்பிக்கை, சுயமரியாதை, சுய உணர்வு, கண்ணியம் வாழ்வின் நோக்கம் போன்ற அடிப்படை குணங்களை சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டே அறிய வேண்டும்.

அடிப்படை குணத்தினை தீர்மானிக்கும் மூலாதாரமானது மூல நட்சத்திரத்திதுடன்  நெருங்கிய தொடர்புடையது.
இப்பிரபஞ்சத்தின் புருஷனாகிய கால புருஷனுக்கு மூல நட்சத்திரத்தில் மூலம் அடிப்படை குணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இதனை மரியாதை ஸ்தானம் என்று அழைக்கலாம். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சூரியன் (சுய மரியாதை) இருக்கும் நிலையானது கால புருஷனின் அடிப்படை ஸ்தானமான மூலம் நட்சத்திரத்திற்கு அதாவது மரியாதை ஸ்தானத்திற்கு எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதே அளவு தூரத்தை பூராடம் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வந்து காணும் நட்சத்திரம்  ஆனது ஒருவரது மகா மரியாதை ஸ்தானமாகும்.

5 comments:

  1. Great Blog!! That was amazing. Your thought processing is wonderful. The way you tell the thing is awesome.

    Black Magic Puja In Gurgaon

    ReplyDelete
  2. Really a nice meter of this post. I read your post. Thanks for share your post with us.

    Best Astrologer In Mumbai

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. சிறப்பான விளக்கம்.
    முடக்கு நட்சத்திரம்
    முடக்கு நட்சத்திரத்தில் நின்ற கிரகங்கள்
    முடக்கு நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்கள்
    முடக்கு ராசியில் நின்ற / பார்த்த கிரகங்கள்
    முடக்கு ராசியின் காரகங்கள்
    முடக்கு ராசி அதிபதியின் காரகங்கள்
    முடக்கு ராசி அதிபதி நின்ற வீட்டின் காரகங்கள்
    அங்கு அவருடன் இணைந்த/ பார்த்த கிரகங்கள்
    முடக்கு ராசி அதிபதியால் பார்க்கப்பட்ட கிரகங்கள்
    இவைகள் எவ்வாறு வேலை செய்யும் என்பதையும்
    முடக்கு செயல்படா நிலைகளையும் ஒரு
    கூடுதல் கட்டுரையாக எழுதுவது சாலச் சிறந்ததாகும்.

    ReplyDelete